தப்பித்தேன்...பிழைத்தேன்!

என்னைக்கும் போல அன்னைக்கும் சூரியன் 6 மணிக்கே வந்துட்டாப்புல.
10 மணிக்கு தூங்கி எந்திரிச்ச என்னை நக்கலா பார்த்துகிட்டு இருந்தார் நம்ம சூரியன் சார்.
என்ன நக்கலா பாக்குற, General Shift ல வந்து போறவன் தான நீ. உன்னையும் நைட் ஷிப்டுல போட்டா தெரியும் என எண்ணிக்கொண்டே குளிச்சி முடிச்சி ஆபீஸ்க்கு போனேன்.

அங்க சூரியனுக்கு முன்னாடி வந்து உட்கார்ந்துகிட்டு இருந்தாரு நம்ம Production Support Manager . நைசா ஒதுங்கி போன என்னை, டேய் ராமசாமி இங்க வாடா என்றார். அடடா சகுனமே சரி இல்லையேனு நெனச்சிகிட்டே சொல்லுங்க சார் என்றேன்.
ஏண்டா, என்னடா ப்ராடக்டு பண்ணீங்க? நேத்து கூட Australia ல ரெண்டு Sev 1 டிக்கெட் வந்துடுச்சி. இல்ல தெரியாம தான் கேக்குறேன், உங்க ப்ராடக்டு பிரச்சனை பண்ணாத ஒரு country சொல்ல முடியுமா உன்னால என்றார்.

துபாய் சார் என்றேன்.

அட, எப்படிடா என்றார்.

துபாய்ல அடுத்த மாசம் தான் சார் rollout என்றேன் அப்பாவியாக.

என்னைக்கி உன்னை சுளுக்கு எடுக்கபோறேனோ தெரியல என்றார் mechanic shop ஓனர் போல.

இங்க எங்களோட ப்ராடக்டு பத்தி கொஞ்சம்....
நல்ல சிஸ்டம் தான் ஆனா rollout பண்ணா வொர்க் பண்ணுறதுக்கு கொஞ்சம் கூச்சப்படும். புதுசா கல்யாணம் பண்ணிக்கிட்டு போற பெண்கள் புகுந்த வீட்டுக்கு போனதும் கூச்சப்படுற மாதிரி. சில country ல கொஞ்சம் நாள் கூச்சப்படும். சில country ல சில மாசங்கள் கூட கூச்சப்படும். அத போய் இந்த Production Support Manager தப்பா பேசுறாரு.

மணி 12:00 ஒரு Phone Call வருது. Production Support Manager அட்டென்ட் பண்றாரு. அவரோட முகம் பல expression காட்டுது. ஏதோ நடக்கக்கூடாதது நடந்துடுச்சினு மட்டும் தெரியிது. Call கட் பண்ணிட்டு டேய் ராமசாமி என்றார்.

அய்யய்யோ நம்ம கதைய முடிசிட்டாங்கலானு நெனச்சிகிட்டே சார் என்றேன்.

உங்க Product தாண்டா.. US ல Issue. மூணு Sev 1. நீங்க செத்தீங்க. ஒழுங்கு மரியாதையா Bangalore ல இருக்க நம்ம ஆபீஸ்க்கு போய் அங்க இருந்து சப்போர்ட் பண்ணி முடிச்சிட்டு வா என்றார். Client செம கடுப்புல இருக்கான். உன்னை ரெண்டு அடி கூட அடிப்பான் Silent ta வாங்கிக்க.

சரிங்க சார். உடனே கிளம்புறேன்.

Travel Desk ல சொல்லி Flight Ticket வாங்கிக்க.

Ok Sir.

நம்ம நேரம், அவசரத்துக்கு Budget Airlines ல தான் ticket கெடச்சிது.
அவசர அவசரமா ஆட்டோ புடிச்சி Chennai Airport க்கு போய்க்கொண்டிருக்கிறேன்.

எந்த flight க்கு சார் போறீங்க என கேட்டார் Auto Driver.

Crow Airline, Bangalore Flight என்றேன்.

Flight Code சொல்லுங்க சார் என்றார்.

விவரமான ஆளாக தான் இருக்கார் என நினைத்தபடி LMV 1234 என்றேன்.

சார் நான் கூட அந்த flight a புடிக்க தான் போறேன் என்றார் ஆட்டோ டிரைவர்.

எனக்கு ஆச்சரியமாக இருந்தது. Budget Airlines வந்ததுல இருந்து சாமானியர்கள் கூட Flight ல போகமுடியிதுனு நெனச்சி சந்தோஷமா இருந்தது. நீங்களும் Bangalore போறீங்களா எனக்கேட்டேன்.

ஆமா சார். உங்கள டிராப் பண்ணிட்டு நானும் வருவேன் அதே Flight ல.

ஆட்டோ வை கட் பண்ணிவிட்டு செக்-இன் கவுண்டரில் நின்றுகொண்டு இருந்தேன்.

விமான பணிப்பெண்கள், பைலட் மற்றும் கோ-பைலட் வந்து செக் இன் செய்துவிட்டு போனார்கள். சட்டென ஏதோ பொறி தட்டியது..,
இப்போ போன பைலட் நம்ம ஆட்டோ டிரைவர் மாதிரி இருக்காரே!!!

ச்சே ச்சே அப்படி இருக்காது. ஆட்டோ டிரைவர் எப்படி ப்ளைட் ஓட்டுவாரு என நானே என்னை சமாதானம் செய்து கொண்டேன். இருந்தாலும், "உங்கள டிராப் பண்ணிட்டு நானும் அதே பிளைட் ல தான் வரேன்னு " அவர் சொன்னது மனசுக்குள்ள ஏதோ பண்ணிகிட்டே இருந்தது.

செக் இன் முடிந்து உள்ளே போக சொன்னார்கள். Airline ல் வேலை செய்யும் ஒருவர் எங்களிடம் வந்து, நம்ம பிளைட் கிளம்ப லேட் ஆகும் அது வரைக்கும் இந்த பிளைட்டை சுத்தி பார்த்துகிட்டு இருங்க என்று சொல்லிவிட்டு நகர்ந்தார்.
அட, இது கூட நல்ல ஐடியாவா இருக்கே. டைம் பாஸ் பண்ணுறதுக்கு இப்படி கூட செட்டப் இருக்கா என சந்தோஷப்பட்டபடி அதை சுத்தி வந்தேன்.

அது ஏதோ பழைய மாடல் ப்ளைட். வலது பக்கத்தில் இருக்க வேண்டிய Propeller ஒன்று உடைந்து இருந்தது, மிகவும் பழையதாக, ஆங்காங்கே உடைந்து நெளிந்து மிக மோசமான நிலைமையில் இருந்தது.

அது சரி, சுத்தி பாக்குறதுக்கு Brand New பிளைட் வைக்க முடியுமா..... என நினைத்துக்கொண்டே ஒரு முழு வலம் வந்து முடித்த நேரத்தில், அதே Airline Staff எல்லோரையும் பார்த்து, கிளம்பலாம் சார்... எல்லாரும் உள்ள ஏறுங்க என்றார்...!!

பிளைட் எங்க? என கேட்டேன். தோ...இது தான் என்றார்...நாங்கள் சற்றுமுன் சுத்தி பார்த்த அந்த உடைசலை காட்டி. அய்யய்யோ என தோன்றியது எனக்கு.

வாங்க சார் சீக்கிரம் அப்புறம் Skyway க்ளியரன்ஸ் கெடைக்காது என்றார் அவர்.

சரி இன்னைக்கி நம்ம கதை முடியனும்னு இருக்கு. அத இவன் முடிச்சா என்ன, அவன் (Client) முடிச்சா என்ன என நினைத்து உள்ளே சென்றேன், ப்ளைட் கதவு அருகில் நம்ம ஆட்டோ டிரைவர் பைலட் சீருடையில் எல்லோரையும் "வாங்க, வாங்க" என வரவேற்றுக்கொண்டு இருந்தார். நான் சந்தேகப்பட்டது சரியாக தான் இருந்தது. ஆட்டோ டிரைவர் தான் இப்போ பைலட்.
ராமசாமி, உனக்கு டிக்கெட் confirmed என்றது என்னுடைய மனசாட்சி.

எல்லோரும் அவரவர் சீட்டில் அமர்ந்தோம். நம்ம பைலட்டும் சென்று அமர்ந்தார்.
In-flight entertainment என்ன இருக்கு என்று பார்க்கலாம் என, என்னுடைய சீட்டில் உள்ள ஹெட் போன் ஐ எடுத்து காதில் மாட்டினேன்.
கொர்ர்ர் என ஒரே சத்தம். திடீரென ஏதோ குரல் கேட்டது. இது தான் அந்த குரல் சொன்னது..."LMV 1234..awaiting Flight Plan.... LMV 1234..awaiting Flight Plan. over". Control Tower ல் இருந்து பேசுவது என்னுடைய ஹெட் போனில் கேட்பது இப்போது தான் எனக்கு புரிந்தது. ஏதோ Connection Problem. எதுக்கும் இருக்கட்டும், bangalore போகும் வரை என்ன தான் நடக்கிறதென ஒட்டுகேட்டுகிட்டே போகலாம் என விட்டுவிட்டேன்.

ஏறி உட்கார்ந்துவிட்டேனே தவிர உள்ளுக்குள் ஒரு சந்தேகம், இது பறக்குமா... இல்லை ரோடு ல ஒட்டிக்கிட்டு போவாங்களா ...எதுவா இருந்தாலும் இன்னும் 10 நிமிஷத்துல தெரிஞ்சிட போகுது...

(HeadPhone ல் கேட்பதை, இனி சுருக்கமாக HeadPhone எனக்கொள்வோம்):
========================
HeadPhone:
Control Tower : Aircraft Preliminary Check.
Driver(பின்ன இவுர பைலட் நா சொல்ல முடியும்): இன்னாது இன்னாது?
Co-Pilot : Aircraft Parameter எல்லாம் சரியா இருக்கானு செக் பண்ண சொல்றாங்க.
Driver: ஓ, அப்படி தெளிவா சொல்லு. ஆல் குட் But லெஸ் வாட்டர் in radiator!.
Co-pilot: சார் என்ன சொல்றீங்க?
Driver : யோவ், radiator ல தண்ணி கம்மியாகீதுனு சொல்றேன். இங்க பாரு முள்ளு கீழகீது.
Co-Pilot : ஐயோ, அது Aircraft engine heat காட்டுறது. அது கம்மியா தான் இருக்கணும். இனிமே எது சொல்றதா இருந்தாலும் என் கிட்ட கேட்டு சொல்லுங்க.
Driver : நான் எதுக்கு உன்ன கேக்கணும். ஏன்யா இத்தினி மீட்டர் வச்சி இருந்தா மனுஷனுக்கு கன்பீஸ் ஆவாது? என்னோட ஆட்டோல வந்து பாரு, எல்லாத்துக்கும் சேர்த்து ஒன்னே ஒன்னு தான் இருக்கும். அது கூட ஓடாது.!!
Control Tower : Flight Plan approved. Proceed to Runway D2-13.
Co-Pilot : என்ன சொல்றாங்கன்னா....
Driver : புரீது. ஜூட் வுடுன்னு சொல்றான். அதான? Ok ஸ்டாடிங்.
========================
ஒரு வழியாக ரன்வே விற்கு போக ஆரம்பித்தது. திடீரென வலது ஓரமாக போய்க்கொண்டு இருந்தது. அய்யய்யோ.. ஏதோ நடக்கப்போகுதென நினைத்த மாத்திரத்தில்....
========================
HeadPhone:
Co-Pilot: Sir, Sir, எதுக்கு right ல போறீங்க?
Driver : பின்ன, முன்னாடி போற மூதேவி எவ்வளவு Slow வா போறான் பாரு. இவன் பின்னாடியே வால புடிச்சிகினு போனா விடிஞ்சிடும். அதான் overtake பண்ணலாம்னு போறேன்.
Co-Pilot : அதெல்லாம் பண்ண கூடாது. Take-off order படி தான் போகணும். Track ல போங்க.
Driver : முடியாது. இந்த வண்டில Horn எங்க இருக்குன்னு சொல்லு. அடிக்கிற அடில, தூர போய் விழணும் அந்த கஸ்மாலம்.
Co-Pilot : இந்த வண்டில அதெல்லாம் கிடையாது.
Driver : இன்னாது, Horn இல்லையா? இம்மாம் பெரிய வண்டில Horn இல்லையா. அட தூ!
Co-Pilot : Sir, Track ல வாங்க. எதிர்ல Land ஆன Aircraft போகுது பாருங்க. இந்நேரம் உரசி இருக்கும்.
Driver : டேய் சாவுக்ராக்கி(எதிரில் போன Aircraft ஐ பார்த்து), வூட்ல சொல்லிகினு வந்துட்டியா?
========================
எனக்கு என்னவோ, நான் தான் வூட்ல சொல்லிக்கினு வந்துட்ட மாதிரி தோன்றியது.
ஒரு வழியாக Take-off ஆனது.
சரி கொஞ்சம் நேரம் ஜன்னல் வழியாக வேடிக்கை பார்க்கலாமென பார்வையை ஓடவிட்டேன். வலது புறத்தில் உடைந்து இருந்த Propeller க்கு பதிலாக ஏதோ புதியதாக மாற்றப்பட்டு இருந்தது. அது என்னவென்று தெரிந்து கொள்ள ஆசைப்பட்டு,
Cabin Crew ஐ அழைத்து விசாரித்தேன், அதுவா சார், இதுக்கு முன்னாடி land பண்ணுறப்போ, ஒரு காக்கா அடிச்சி Propeller ஒடஞ்சி போய்டுச்சி ஆனா காக்கா Safe ஆ Escape ஆயிடுச்சி!! என்றார்.
அது சரி, இப்போ அங்க என்ன சுத்திகிட்டு இருக்கு?
அது...Propeller மாட்ட ரொம்ப நேரம் ஆகும்னு சொன்னாங்க அதனால, Khaitan Fan மாட்டி விட்டு 5 ல வச்சிட்டோம்!?!?!
ஏன் சார், குளிருதா? வேணும்னா Off பண்ணிடலாம் என்றார்.
உங்கள நம்பி எல்லாம் எப்படி இத்தனை பேர் பிரயாணம் செய்யிறாங்கன்னு நெனச்சி பயமா இருந்தது.
========================
HeadPhone :
Co-Pilot : Sir, Auto Pilot On பண்ணிடுங்க
Driver : யோவ், நான் தான்யா Auto ஓட்டுன Pilot.
Co-Pilot : அது இல்லை sir, இனிமே நீங்க எதுவும் பண்ண வேணாம். அதோ அந்த Button அ அழுத்துங்க அதுவே ஓட்டும்.
Driver : அதுவே ஓட்டுமா அப்புறம் எதுக்கு என்னை இஸ்தாந்திங்க?
Co-Pilot : என்ன sir, உங்க கூட பெரிய தொந்தரவா போய்டுச்சி. உங்கள எங்க புடிச்சாங்க அத சொல்லுங்க முதல்ல.
Driver : அப்புடி கேளு... தேனாம்பேட்டை stand ல வண்டிய போட்டுட்டு மொபைல் phone ல ப்ளைட் கேம்ஸ் ஆடிக்கினு இருந்தேன். அத பாத்த ஒருத்தரு, இம்மாம் ஸோக்கா ஒட்டுறியே, நாளைக்கி வரவேண்டிய pilot திடீர்னு ஊருக்கு பூட்டான். நீ வரியான்னு கேட்டாரு. ஐய எனக்கு அதெல்லாம் பழக்கம் இல்லையேன்னு சொன்னதுக்கு...City ல Auto வே ஓட்டிட்ட, ப்ளைட் தாராளமா ஓட்டலாம்னு சொன்னாப்புல, சரின்னு வந்துட்டேன்.
========================
எனக்கு பக்கத்தில் ஒரு பாட்டியும், தாத்தாவும் உட்கார்ந்து இருந்தார்கள்.
Budget Airlines ல் சுவாசிக்கும் காற்று தவிர மற்ற எல்லாவற்றிற்கும் காசு குடுக்க வேண்டும். இருந்தாலும், தாத்தாவிற்கு பாட்டியே மூணு முறை Beer வாங்கி குடுத்தார். மொத்தத்தையும் முடித்துவிட்ட தாத்தா Rest Room க்கு செல்ல எத்தனித்தார். சீட்டில் இருந்து எழுந்த உடனே பாட்டிக்கு Tata காட்டினார். போகும் வழியில் ஒரு முறை திரும்பி Tata காட்டினார். Rest Room க்கு முன்னாடி நின்றுகொண்டு மீண்டும் Tata காட்டினார். இவர் என்ன Urine க்கு போகிறாரா இல்லை Foreign க்கே போகிறாரா என தோன்றியது எனக்கு.

Budgen Airlines ல் Rest Room உபயோகிக்க கட்டணம் இல்லையென்பது ஒரு ஆறுதலான விஷயம். அங்கும் ஒருவர் காசு வசூல் செய்ய bench போட்டு உட்கார்ந்துவிட்டால்...எப்படி இருக்குமென நினைத்துப்பார்த்தேன்....
வெளியில் இருப்பவர்: சார், Urine க்கு 1 Rupee., மத்ததுக்கு 2 Rupees.
பயணி: மத்ததுன்னா? உள்ள Internet Check பண்ற facility இருக்கா?
இப்படி யோசித்துக்கொண்டிருக்கையில், ஒரு வழியாக Bangalore ஐ நெருங்கி விட்டோம்.
========================
HeadPhone:
Control Tower : Ready for Approach, Deploy Landing Gear.
Driver : அது இன்னா கியர்பா?
Co-Pilot : அதோ இருக்கே அந்த பட்டன் தான் Landing Gear.
Driver : ஓ இதுவா.. Gear Find. Clutch where?
Co-Pilot : Sir, Sir, என்ன Clutch?
Driver : யோவ், Clutch புடிக்காம எப்புடி கியர் போடுறது? இன்ஜின் Off ஆயிடாது?
Co-Pilot: அதெல்லாம் ஆகாது. அந்த button அ அழுத்துங்க ப்ளீஸ்.
Driver : சரிபா அழுத்தறேன். கண்ணை தொடை மொதல்ல... அதுக்கு போய் இன்னாத்துக்கு அய்வுற ?
Control Tower: Runway A3-51 engaged.
Driver : அப்பாடா...எறங்க சொல்ட்டான்பா நீ left பாரு!!
Co-Pilot : எதுக்கு left பாக்கணும்?
Driver : யோவ், இன்னா நீ? எல்லாத்துக்கும் கேள்வி கேக்குற? எங்கனாவது ஓராண்ஜிட போவுது Left பாருயான்னா....
Co-Pilot : சரி, வரலாம் வாங்க.. steady ya..
Driver : ஆங்.....இப்போ தான் நீ என்கூட sync ஆகுற. இனிமே போழச்சிக்குவ.
========================
அப்பாடா உயிரோடு வந்து சேர்ந்தோம் என்றிருந்தது எனக்கு. அடுத்த பிரச்சினையை எதிர்க்கொள்ள ஓடினேன்.
Office ற்கு சென்று, என்னுடைய manager ஐ பார்த்தேன். Sir, Sorry Sir. 3 Sev 1 என கேள்விப்பட்டேன். 1 Hour ல Solve பண்ணிடறேன் சார் என்றேன்.
அதுக்கு அவசியமே இல்லை ராமசாமி. Union problem ல Heavy Economical Loss ஆயிடுச்சாம் Client க்கு. So, bankruptcy file பண்ணி இருக்காங்க. கம்பெனியே ஊத்த போகுது இனிமே நம்ம Product எதுக்கு அவுங்களுக்கு. நீங்க நிம்மதியா ஊருக்கு கிளம்புங்க. வந்த Flight லையே டிக்கெட் புக் பண்ண சொல்லட்டுமா? என்றார்.
நம்ம ஆட்டோ டிரைவர் ஞாபகம் வந்தது எனக்கு. வேணாம் சார். நான் நடந்தே போய்க்கிறேன் சென்னைக்கு.
அவருடைய பதிலுக்கு காத்திராமல் நடையை கட்டினேன்.!
பி. கு. : இதில் வரும் சம்பவங்கள், கருத்துக்கள் அனைத்தும் கற்பனையே. யாரையும், எதையும் குறிப்பிடுவன அல்ல.

4 comments: