நான் ஆளான தாமரை!

அது ஒரு அழகிய நிலா காலம், கல்லூரிப்பருவம்.

இவனுங்க ஒரு நாலு பேர்.

College Hostel ல தங்காம வெளியில ஒரு ரூம் வாடகைக்கு எடுத்து தங்கிட்டு இருக்காங்க.
ரூம்ல தங்குறானுங்கன்னு சொன்னதுமே இவனுங்களுக்கு படிச்சி முன்னுக்கு வரனும்ங்குற எண்ணம் இருக்காதுன்னு நீங்க நினைத்தது சரி தான்.

அந்த நாலு பேர் பற்றி ஒரு சின்ன Intro.,

Culprit No.1 - Mr. Apple!
இவனுடைய original பெயர் வேற என்னவோ. ஆனா எல்லாருக்கும் Apple னு சொன்னாதான் தெரியும். அது ஒரு ஆகுபெயர்!!. இவனுக்கு ரொம்ப நாளா உடம்புல ஏதோ கோளாறு. Apple சாப்பிட்டா மட்டும் தான் ஒத்துக்கும். Apple தவிர Beer ஒத்துக்கும். என்ன Combination னே நமக்கு புரியாது!!

Culprit No.2 - Mr. குமார்
இவர் ஒரு பிற்போக்கு சிந்தனைவாதி. இப்போ நாட்டுல நடக்குற எதுவுமே இவருக்கு பிடிக்காது. எல்லா காலேஜ் பசங்களுக்கும் பிடிக்கிற காதல் கூட இவருக்கு பிடிக்காதுன்னா பார்த்துக்கோங்க.

Culprit No.3 - Mr. சேகர்
நானும் ஒரு மணி நேரமா யோசிக்கிறேன் இவரைப்பற்றி என்ன சொல்லலாம்னு. ஒன்னு கூட தோணலை. இந்த நாலு பேர்ல இவனும் ஒருத்தன்.

Culprit No.4 - Mr. அருண்
வாய மூடினா தெய்வ குத்தம் ஆயிடும்னு யாரோ சொல்லிட்ட மாதிரி பேசிகிட்டே இருப்பான். சரியான சினிமா பைத்தியம். இவன்கிட்ட ஒரு கெட்ட பழக்கம் உண்டு. நல்ல சினிமா பாடல்களோட Lyrics ஐ மாத்தி பாடுவான். அது ரொம்ப கொடுமையா இருக்கும்.
இந்த Article ல இவன் பேசுற dialogue க்கு மட்டும் ஒரு Syntax இருக்கு. அதாவது
கீழ இருக்க Format ல இருக்கும்.

அருண் (படத்தின் பெயர், பாடலின் முதல் வரி) - ; <அவன் பேசும் dialogue>

ஒரு உதாரணம்,
அருண்(இது நம்ம ஆளு, நான் ஆளான தாமரை) - நான் பாதாள சாக்கடை, ரொம்ப நாளாக வாரல; Hello எப்படி இருக்கீங்க?
இவன் பேசினா இப்படி தான் கலீஜா இருக்கும். ஆனா இவன் நிறைய பேசாம பார்த்துக்குறேன்.

இந்த நாலு பேரோட நாம எல்லாரும் 24 மணி நேரம் தங்கி இவனுங்களோட வாழ்க்கை முறையை கிட்ட இருந்து பார்க்க போறோம்.
=========================================

இரவு 8 மணி. வேகவேகமாக அருண் ரூம் வாசலில் நுழைகிறான். கால் தடுக்கி அவன் செருப்பு அறுந்து விழுகிறது.

அருண் (காதலுக்கு மரியாதை, விழியில் விழி மோதி) - காலில் கல் மோதி செருப்பு அருந்திங்கு விழுந்ததே; அடடா நல்ல செருப்பு அருந்துடுச்சே.
குமார் : டேய் பார்த்து வரக்கூடாது?
அருண்: உன்னை பார்த்துகிட்டே வந்ததாலதாண்டா கால் தடுக்கிடுச்சி. சரி ஆத்தாவுக்கு கூலி குடுக்கலாமா?
குமார்: நான் கூட அதையே தான் நெனச்சிகிட்டு இருந்தேன்!!
அருண்: எங்க நம்ம Apple ம் சேகரும்?
குமார்: டீ சாப்பிட போனானுங்க, வந்துடுவாங்க.
அருண்: 8 மணிக்கு என்னடா டீ. சரி அவனுங்க வந்தா சொல்லிடு. நான் போய் பூஜை சாமான் எல்லாம் வாங்கிட்டு வந்துடறேன்.
என சொல்லிவிட்டு டாஸ்மாக்கிற்கு கிளம்பினான்!

மணி 9:
அருண்(கிழக்கு வாசல், வந்ததே ஓ ஓ குங்குமம்) : வந்ததே ஓ ஓ சரக்கு; மச்சி எல்லாம் வாங்கிட்டு வந்துட்டேன். மொத்தம் பில் 320 ருபாய். வழக்கம் போல நம்ம Tailor கிட்ட தான் கைமாத்து வாங்குனேன்.
Apple: எவ்வளவு நேரம்டா இத வாங்க?
அருண்: டாஸ்மாக் ல சினிமா தியேட்டர் மாதிரி கூட்டம். அதான் லேட். வளவளன்னு பேசாத சீக்கிரம் news paper ஐ போடு. Side dish ஐ கொட்டலாம்.
சேகர் : எனக்கு என்னடா வாங்கிட்டு வந்த?
அருண் : உனக்கு Half Bottle எலி மருந்து. News Paper ஐ போட்டு வைக்கிற அறிவு கிடையாது, கேள்வி மட்டும் கேளு.

ஒரு வழியாக எல்லாம் செட் ஆகி முதல் ரவுண்டு ஆரம்பித்தார்கள். இதில் சேகர் தவிர எல்லோரும் Beer தான் குடிப்பார்கள். சேகர் Whisky மட்டும் தான் சாப்பிடுவான்.

முதல் ரவுண்டு முடிந்து இரண்டாவது ரவுண்டு புறப்பட்டார்கள். ஆனால் சேகர் இன்னும் முதல் ரவுண்டு ஐ அப்படியே வைத்து இருந்தான்.

அருண் ஆரம்பித்தான், ஏன்டா Apple, நீ யாரையாவது Love பண்ணி இருக்க?
குமார்: டேய் லவ் பத்தி எல்லாம் பேசுனா நான் எழுந்து போய்டுவேன்.
அருண்: இரு மச்சி, கோவப்படாத. நான் என்ன உன்னையா கேட்டேன். Apple சொல்லுடா யாரையாவது லவ் பண்ணி இருக்கியா?
Apple : இப்போ கூட லவ் பண்ணிக்கிட்டு தாண்டா இருக்கேன்.
சேகர்: ஆச்சர்யமா இருக்கே. எனக்கே இவ்வளவு நாள் தெரியாதேடா. யார?
Apple : ராதிகாவ மச்சி.
அருண்: அடப்பாவி ராதிகாவுக்கு எப்பவோ கல்யாணம் ஆயிடுச்சிடா.
Apple : என்னடா சொல்ற?
அருண்: அவுங்க சரத்குமார கல்யாணம் பண்ணி பல வருஷம் ஆகுது மச்சி!
Apple : டேய் ச்சீ நான் நம்ம கிளாஸ் ராதிகாவ சொல்றேண்டா.
அருண்: யாரு, அந்த "குட்டையா உயரமா", "கருப்பா வெள்ளையா" இருக்குமே அதுவா?
Apple : ஆமாம்!!!! மச்சி.
அருண்: ரெண்டு ரவுண்டு ஆனா எது சொன்னாலும் மண்டைய ஆட்டுவியே.
அதெல்லாம் ஒரு மூஞ்சின்னு அதை போய் லவ் பண்ணுறியேடா.
Apple: என்னோட லவ்வ பத்தி தப்பா பேசாத. நான் செத்து மண்ணோட மண்ணா போனாக்கூட எனக்கு ராதிகாவோட நெனப்பு இருந்துகிட்டே தான் இருக்கும்.
சேகர்: சாவுன்னு சொன்னதும் தான் ஞாபகம் வருது. ஏன்டா அருண், செத்த அப்புறம் புதைக்கிறாங்களே மூக்குல மண்ணு போனா தும்மல் வராது?
அருண்: அந்த மாதிரி நேரத்துல குப்புறபடுத்துக்குவாங்கடா. நீ கொஞ்சம் சும்மா இருக்கியா, எவ்வளவு முக்கியமான விஷயம் பேசிகிட்டு இருக்கேன்.

Round 2 Completed. Round 3 Started. சேகர் இன்னும் முதல் Round ஐ அப்படியே வைத்து இருந்தான்.அருண், குமார், Apple மூவரும் முழு மப்பில் இருந்தார்கள்.

அருண்: நான் கூட ஒரு பொண்ண காதலிக்கிறேன் மச்சி. ஆனா கைகூடுமான்னு தான் தெரியல.
சேகர்: யாருடா அது?
அருண்: காமாட்சி!
Apple : ஆள் யாரு, address என்னன்னு சொல்லு. நான் உங்கள சேர்த்து வைக்கிறேன்.
குமார்: டேய் அந்த மூதேவி, கரகாட்டக்காரன் படத்துல வர Heroin ஐ சொல்றான். அதுல கனகாவோட பேரு காமாட்சிடா.
அருண்: ஆமா. ஆனா என்ன ஆனாலும் காமாட்சிய தான் கட்டுவேன்.
சேகர்: இப்படி அடம் பிடிச்சா எப்படி. எத்தனை லேட்டஸ்ட் Heroin வந்துட்டாங்க அணிஷ்டா, கொநிஷ்டிகான்னு அவுங்கள்ல யாரையாவது லவ் பண்ணு மச்சி.
அருண்: உங்க யாருக்கும் என்னோட காதல் புரியாது. நான் பேசாம ஊட்டி, கொடைக்கானல்ன்னு சந்நியாசம் போக போறேன்.
குமார்: ஊட்டி நல்லா இருக்கும். ஆனா இப்போ போக கூடாது மச்சி, இது offseason.
இந்த நேரத்தில் அருண் mobile phone சிணுங்கியது. ஊட்டியிலிருந்து அவனுடைய மாமா அழைக்கிறார்.
ஊட்டி மாமா: டேய் அருண் ஒரு Happy News.
அருண்: என்ன மாமா?
ஊட்டி மாமா: எனக்கு குழந்தை பிறந்து இருக்குடா.
அருண்: என்ன மாமா சொல்றீங்க? இப்போ பொறக்கக்கூடாது, இது Offseason ன்னு சொன்னானுங்களே பசங்க.
மாமா: !?!?!?
போதையில் எதை எதையோ குழப்பிக்கொண்டிருந்தான். புரிந்துகொண்ட மாமா லைன்ஐ துண்டித்தார்.

ஒரு வழியாக, இருந்த Beer முழுவதையும் முடித்தார்கள். சேகர் மட்டும் இன்னும் முதலில் ஊற்றிய Whisky ஐ அப்படியே வெறித்து பார்த்துக்கொண்டிருந்தான்.

குமார்: அப்பாடா, கடமை முடிஞ்சது. சாப்பிட போகலாமா?
சேகர்: எனக்கு நல்லா ஏறிடுச்சி!!?!?!?! நீங்க மட்டும் போய் சாப்பிட்டுட்டு எனக்கும் வாங்கிட்டு வாங்க.
Apple : &'#)('#)#(")=("&)'). ஏன்டா சரக்கை முறைச்சி பார்த்ததுக்கே உனக்கு ஏறிடுச்சா?

சேகர் அமைதியாக இருந்தான்.

குமார் தொடர்ந்தான், அடிபட்டு சாவாத. ஒழுங்க எழுந்து வா. வந்து விடியிற வரைக்கும் கூட முறச்சிகிட்டு இரு.

சேகரும் சாப்பிட கிளம்பினான்.

சாப்பிட்டு விட்டு Apple மட்டும் night show சினிமாவிற்கு Two Wheeler ல் சென்றான்.
வழியில் ஒரு தெரு நாய் குறுக்கில் வர அதன் மீது இடித்து, கிழே விழுந்து கையில் எலும்பு உடைந்தது.
அவனே தட்டு தடுமாறி எழுந்து மருத்துவமனை சென்று கட்டுபோட்டுக்கொண்டு விடியற்காலை அறைக்கு வந்தான். அங்கே அனைவரும் நல்ல மயக்கத்தில் இருந்தனர்.

காலை 7 மணி:
அருண் முதலில் தூங்கி எழுந்து குளித்து முடித்து அவனுடைய உள்ளாடைகளை தேடினான். அவன் உலர்த்திய இடத்தில் காணவில்லை.

அருண்(கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், எங்கே எனது கவிதை): எங்கே எனது ஜட்டி, கொடியிலே உலர்ந்து மடிந்த ஜட்டி; டேய் எவன்டா எடுத்தது ஒழுங்கா சொல்லிடுங்க.
Apple: ஏன்டா கத்துற? நானே கைல fracture ஆகி படுத்துகிட்டு இருக்கேன்.
அருண்: என்னடா சொல்ற? அட ஆமா, இப்போ தான் பாக்குறேன். என்னடா ஆச்சி?
Apple: நேத்து நைட் வழில ஒரு நாய் குறுக்குல வந்துடுச்சி மச்சி. ஆனா என்னைவிட அந்த நாய்க்கு தான் நல்ல அடி.
அருண்: என்ன ஆச்சர்யம் பாருடா, இதையே தான் அந்த நாயும் என்கிட்டே சொல்லுச்சி!!
Apple: நானே நொந்து போய் இருக்கேன் கிண்டல் பண்ணுறியேடா
அருண்: பின்ன என்னடா அந்த நாய்க்கு எவ்வளவு அடிபட்டா என்ன? நீ இன்னும் 2 மாசத்துக்கு கை இல்லாம தான திரியனும்.

Apple தவிர எல்லோரும் காலேஜ் சென்றார்கள்.

கல்லூரியில் குமார் தனியாக நின்றிருந்த நேரம், ஷீலா அவனிடம் பேச வந்தாள்.

ஷீலா - இவளுக்கு குமார் மீது ஏதோ ஒரு ஈர்ப்பு. யாரையும் மதிக்காத, எல்லோரையும் எடுத்தெறிந்து பேசும் குமார் மீது எப்படி இப்படி....தெரியவில்லை.

ஷீலா: குமார், நல்லா இருக்கியா?
குமார்: நல்லா இல்லை. இன்னைக்கி சாயந்திரம் சாக போறேன்.
ஷீலா: ஏன் இப்படி பேசுற? ஒரு கேள்வி கேக்கனும்னு ரொம்ப நாளா ஆசை
குமார்: <அமைதி>
ஷீலா: உங்க அப்பா அம்மா என்ன பண்றாங்க?
குமார்: அப்பா கோயில் வாசல்ல பிச்சை எடுக்குறாரு. அம்மா முனிசிபாலிட்டில குப்பை வாருறாங்க. வேற ஏதாவது தெரிஞ்சிக்கனுமா?
ஷீலா: எப்போ பார்த்தாலும் இப்படி பேசினா உன்னை யாருக்கும் பிடிக்காம போய்டும் குமார்.
குமார்:<அமைதி>
ஷீலா: உன்னோட ஷர்ட் பின்னாடி கொஞ்சம் கிழிஞ்சி இருக்கு. அதை பார்த்து போடா கூடாது?
குமார்: அதான் சொன்னேன்ல எங்க அப்பா பிச்சை எடுக்குறார்னு.
ஷீலா: சரி அதை விடு. உன்னோட ராசிக்கு நீ இந்த சாமி போடோவ பாக்கெட்ல வச்சிக்கிட்டா நல்லதுன்னு சொன்னாங்க. உனக்காக தான் வாங்கிட்டு வந்தேன். இந்தா வச்சிக்கோ.
குமார்: நாளைக்கு வா, என்னோட போடோவ தரேன். அந்த சாமிய பாக்கெட்ல வசிக்க சொல்லு. மூஞ்ச பாரு நல்லா.
ஷீலா அழுதுகொண்டே நகர்ந்தாள். அந்த நேரம் பார்த்து அருண் வந்தான்.

அருண்:(நானே ராஜா நானே மந்திரி, மயங்கினேன் சொல்ல தயங்கினேன்) - சொரிகிறேன் மெல்ல சொரிகிறேன் ரொம்ப அறிக்கிதே கழுத்து; கழுத்துல ஏதோ பூச்சி கடிச்சிடுச்சி.
அந்த பொண்ணு உங்கிட்ட எவ்வளவு பிரியமா இருக்கு, ஏன்டா எப்போ பார்த்தாலும் அதை அழ வைக்கிற?
குமார்: இது உனக்கு தேவை இல்லாதது.
அருண்: அவனவன் ஒரு பொண்ணு நம்மள பார்க்காதான்னு அலையிறான். உன்னோட நேரம், ஒரு பொண்ணு வலிய வந்து பேசுது அதை Pickup பண்ண துப்பு இல்லை, எங்கிட்ட எகிறு.

கல்லூரி முடிந்தது. மூவரும் வீடு திரும்பினார்கள். அரூணுக்கு வயிறு ஏதோ செய்ய ஆரம்பித்தது. அவசர அவசரமாக அறை உள்ளே நுழைந்தான். Apple தடுத்தான்.

Apple: டேய் Toilet ஐ யூஸ் பண்ணாத. ப்ளீச்சிங் பவுடர் போட்டு ஊற வச்சி இருக்கேன்.
அருண்: (வசந்த மாளிகை, இரண்டு மனம் வேண்டும்) - இரண்டு Toilet வேண்டும், ஓனரிடம்(வீட்டு) கேட்பேன். ஊற வைக்க ஒன்று, நாற வைக்க ஒன்று;

Apple : ஏன்டா இந்த அவசரத்துலயும் உனக்கு எப்படிடா பாட்டு வருது?
அருண்: இதுக்கெல்லாம் பதில் சொல்ற பொறுமை இல்லை. நான் வெங்கடேசன் ரூம்க்கு போய் வேலைய முடிச்சிட்டு வரேன்.

இரவு 8 மணி: எல்லோரும் இரவு உணவிற்காக கிளம்பினார்கள். எப்போதும் அண்ணன் கடையில் தான் இட்லி சாப்பிடுவார்கள்.

அண்ணன் - இவர் ஒரு அதிசய மனிதர். தினமும் இவருடைய கடையில் 70 முதல் 100 பேர் வரை சாப்பிடுவார்கள். எல்லோரும் சாப்பிட்டு முடித்து என்ன சாப்பிட்டார்கள் என அண்ணனிடம் சொல்ல வேண்டும். அண்ணன் குறிக்கவோ, எழுதவோ மாட்டார். சரி என மட்டும் சொல்வார்.

பிறகு, கடை அடைத்து இரவு TV முன்னாள் உட்கார்ந்துகொண்டு சினிமா காமெடி பார்த்துக்கொண்டே கணக்கு நோட்டில் ஒவ்வொருவருக்கும் நேராக அவர்கள் என்ன சாப்பிட்டார்கள் என குறிப்பார்!.

இவ்வளவு நினைவுத்திறன் உடைய இவர் NASA வில் சேராமல் இட்லி கடை வைத்திருக்கிறாரே என நினைக்காதீர்கள்.
சாப்பிட்டவர்கள் கூறியதற்கும் இவர் குறித்ததர்க்கும் சம்பந்தமே இருக்காது. நேற்று என்ன Number போட்டாரோ அதிலிருந்து ஒன்றோ இரண்டோ கூட்டி கழித்து போடுவார்.

ஒரு முறை குமார் ஊருக்கு போய் இருந்தான். 20 நாட்கள் அண்ணன் கடையில் சாப்பிடவே இல்லை. ஆனாலும் அந்த மாதமும் இவனுக்கு எப்போதும் வரும் Bill கொடுத்தார் அண்ணன்.

குமார்: அண்ணே, நான் 10 நாள் தான் சாப்பிட்டேன் 200 ரூபா தான் வரும். நீங்க 650 ரூபா சொல்றீங்களே.
அண்ணன்: சரிப்பா சரிப்பா, 200 ரூபா குடு! தம்பி கிட்ட போய் நான் கணக்கா பாக்க போறேன்.!!!
அண்ணன் மோசமானவர்ன்னு அன்னைக்கி தான் தெரிஞ்சது.

அண்ணன் கடையை அடைந்தார்கள்.
எல்லோரும் ஆர்டர் செய்து சாப்பிட்டுக்கொண்டு இருந்தார்கள்.
திடீரென ஒரு பையன் வந்தான்.

பையன்: அண்ணே நேத்து நீங்க பார்சல் பண்ணி குடுத்த இட்லி ஒன்னுல தும்பி இருந்தது!!!!!!!
அண்ணன்: (அசராமல்) அப்படிங்களா தம்பி, அழகா இருந்ததா? என்ன கலர்ல இருந்தது?!!!!
பையன்: தும்பி வந்ததுன்னு சொல்றேன் நீங்க ரொம்ப சாதாரணமா கேள்வி கேக்குறீங்களே?
அண்ணன்: பல்லி வந்தா தான் தப்பு, தும்பி வரலாம்.
பையன்:!?!?

அருண்: அடப்பாவி அண்ணன் மட்டமான ஆளா இருக்காறேடா.
சேகர்: நம்ம இட்லி ல வரல இல்ல, வேலைய பாரு.
Apple : அண்ணே சட்னி எடுத்துகிட்டு வர சொல்லுங்க.
அண்ணன்: கல்ப்பு, கெட்டி சட்னி எடுத்துகிட்டு வாம்மா.

அண்ணனுடைய புதல்வி சட்னி எடுத்துகிட்டு வந்து வைத்தாள். சிறிது நேரம் சென்றது. மீண்டும் சட்னி தேவைப்பட்டது.

இந்த முறை சேகரே குரல் கொடுத்தான்.
"கல்ப்பு கெட்டி சட்னி எடுத்துகிட்டு வாம்மா".
அண்ணன்: அடி செருப்பால யாருடா அவன்?
சேகர் : ?!?!?
அண்ணன்: சட்னி வேணும்னா என்கிட்டே சொல்லுடா.
சேகர்: (தாழ்ந்த குரலில்) அருண், ஏன்டா அண்ணன் டென்ஷன் ஆயிட்டாரு?
அருண்: பின்ன, "கல்ப்பு" அவரோட wife டா. கல்பனாவ தான் அவரு செல்லமா "கல்ப்பு" னு கூப்பிடுவாரு. உன்ன யாரு அப்படி கூப்பிட சொன்னது?

சேகர் இது நாள் வரை கல்ப்பு அவருடைய மகள் என நினைத்து இருந்தான். நானும் தான்.!!!

இப்படியாக இரவு உணவும் முடிந்தது. நம்முடைய 24 மணி நேர பயணமும் முடிந்தது!

இங்கு பார்த்த நால்வரும் இன்று அமெரிக்காவில் ஆளுக்கு இரண்டு மனைவிகள் ஒரு வீடு என செட்டில் ஆகிவிட்டார்கள். நான் ஏதோ மாற்றி சொல்லிவிட்டேன் என நினைக்கிறேன்! பரவாயில்லை எல்லாம் நம்ம பசங்க தான் தவறாக நினைக்க மாட்டார்கள்!

மீண்டும் சந்திப்போம்!
Ashok-M