நல்ல காலம் பொறக்குது!!

அன்பர்களே, நண்பர்களே, ஆன்றோர்களே, பெரியோர்களே....

உங்களுக்கெல்லாம் ஒன்னு சொல்லிக்கிறேன். நான் இந்த கம்பெனிய விட்டு போக போறேன்.
இந்த கம்பெனி இன்னைக்கி உருப்படும் நாளைக்கி உருப்படும்னு wait பண்ணி பார்த்தேன். ஒன்னும் வேலைக்கு ஆகல. அதனால நான் நடைய கட்டலாம்னு முடிவு செஞ்சிட்டேன்.

யப்பா யப்பா யப்பா...என்ன கஷ்டம் ...என்ன கஷ்டம்....போதும்டா சாமி....உங்க கூட மல்லு கட்டுனது. இங்க சேர்ந்ததுல இருந்து ஒரு நாளாவது மனுஷன நிம்மதியா விட்டு இருப்பீங்களா?.. அதான் பார்த்தேன்...இங்க குடுக்குற கூலிய விட (அப்புறம் நீங்க குடுக்குறத சம்பளம்னா சொல்ல முடியும்?) கொஞ்சம் கம்மியா தான் குடுக்குறேன்னு சொன்னாங்க. மனுஷனுக்கு நிம்மதி தான் முக்கியம்னு சரின்னு சொல்லிட்டேன்.

இந்த கம்பெனி தான் உருப்புடாம போய்டுச்சே.. புது கம்பெனி எப்படி இருக்கும்னு...ஜோசியர் கிட்ட போய் கேட்டேன். நான் புதுசா போற கம்பெனியும் வெளங்காம தான் போயிடுமாம்!... என்னங்க இப்படி சொல்றீங்கனு கேட்டதுக்கு... ஆமா தம்பி, உன்னோட ராசியினால தான் நீ போற கம்பெனி எல்லாம் உருப்புடாம போய்டுது. ஒரு 48 நாள் விரதம் இருந்தா உனக்கும் நல்லது....நீ போற கம்பெனிக்கும் நல்லதுன்னு சொல்லிட்டாப்புல.

So, வர 20 ம் தேதி புது கம்பெனில Join பண்றேன். அடப்பாவி புது கம்பெனிய நாசம் பண்ண போறியான்னு கேக்காதீங்க. 48 நாள் விரதம் already complete பண்ணிட்டேன். அதனால...இனிமே உங்க எல்லாருக்கும் நல்ல காலம் பொறக்க போவுது.

ஆசை இருக்கவங்க என்னை Contact பண்ணுறதுக்கு என்னுடைய details கீழ குடுத்து இருக்கேன் Note பண்ணிக்கோங்க.
Email : jamesbond@bond.com
Mobile : 91912-12345 (Fancy Number...கூட்டி பார்த்தா 6 வரும்)...
நன்றி.!
பி. கு. : Mobile number கூட்டி பார்த்துட்டு...6 வரலையே... 1 தான வருதுனு நெனச்சவங்க....தயவு செஞ்சி வேற ஏதாவது வேலைய தேடுங்க...இவ்வளவு சும்மா இருந்து... இந்த கம்பெனிய குட்டிசுவரா ஆக்குனது போதும்.

4 comments:

  1. Story is good but still u can concentrate on elaborating the incidents like the thappitan pilayathan story !

    ReplyDelete
  2. Nanda,
    Thanks for the comments...Sure vll do it!

    ReplyDelete