தொட்டதெல்லாம் தூள் பறக்குது!!

இன்னைக்கி தான் கேட்டேன் இந்த தத்துவ பாடலை!
"மலையூறு நாட்டாமை" from மலையூர் மம்பட்டியான்(Prashant).

ஒரு doctorate பண்ற அளவுக்கு அதுல விஷயம் இருக்கு பாஸ்...!!

காட்டுக்குள்ள ஆரம்பிக்கிது song ..Prashant ஒரு வன்மத்தோட சிம்மாசனத்துல உக்கார்ந்து இருக்காரு - காட்டு ராஜா போல இருக்கு!

டண்டணக்கு டணக்கு டணக்கு னு மியூசிக் ஸ்டார்ட் ஆகுது...

"மலையூறு நாட்டாம மனச காட்டு பூட்டாம உன்ன போல யாரும் இல்ல மாமா" னு அந்த அழகி பாட..
"நான் மின்னல புடிக்கதான... ஒரு வலைய கொண்டு போறேன்...மீன் புடிக்க, மான் புடிக்க மனசு இல்ல போடி..." னு நம்ம ஆளு சொல்றாரு...

அத கேட்டதும்...அடடா இந்த ஆளு என்னடா வெடுக்குனு இப்படி சொல்லிட்டாரே...அந்த பச்சை மண்ணு தனியா தான் பாட்டு முழுக்க ஆடனுமானு பதருனா...

ரெண்டாவது லைன் பாடுறதுக்கு சீட்டவுட்டு எறங்கி வந்துட்டாப்புல நம்ம ஆளு. (அது சரி உக்கார்ந்துகிட்டே சொன்னா அவ்வளவா புரியாதுல்ல...கூட மாட ஆடி பாடி புரியவைக்கிறாரு போல!)

அடுத்த லைன் ல அண்ணன் சொல்றாரு...

"நான் வேட்டையாட தான ஒரு வேல கொண்டு போறேன்..அடி பூ பறிக்க, தேன் எடுக்க பொழுது இல்ல போடி" னு... எங்கயோ அவசரமா போய் இனிமே தான் வேலைய ஆரம்பிக்கணும் னு அவரு clean ஆ தான் சொல்றாரு...
ஆனா இந்த பொண்ணு..."தொட்டதெல்லாம் தூள் பறக்குது மம்பட்டியான் மல மம்பட்டியான்" னு பாடி அவுற confuse பண்ணுது...
இத கேட்டுட்டு அவரு..ஓ நாம ஏற்கனவே Project அ முடிச்சிட்டோம் போல இருக்குனு னு நெனச்சி சிம்மாசனத்துல உக்கர்ந்துட்டா..இல்ல நான் தெரியாம தான் கேக்கறேன்...இந்த உலகத்த யாரு பாஸ் காப்பாத்துறது?

அடுத்த லைன் அந்த பொண்ணு...
"தடைபோட தடைபோட பார்த்தாங்க உங்கள தேடி வந்தேங்க Every where I am looking for you மாமா..." னு Gap ல ஹிந்தி ல பாடுது..
போச்சி..நம்ம தல next தெலுங்குல பிரிக்க போறாருன்னு நெனச்சொம்னா...அங்க ஒரு ட்விஸ்ட்.!
அண்ணன் அந்த லைனை safe ஆ சாய்ஸ்ல விட்டுட்டு...இப்படி சொல்றாரு..
"நான் காட்டருவி போல...ஒரு காரணமா போறேன்...அடி பட்டாம்பூச்சி புடிச்சி ரசிக்க ஆசை இல்ல போடி..."

Wow How symbolic !
இதே ரீதியில பாடி முடிக்கிறாங்க ரெண்டு பேரும்.
பாட்டு முடியிற வரைக்கும் ப்ராஜெக்ட் தான் முக்கியம்னு சொல்றப்புல. Final ஆ என்ன ஆச்சினு youtube ல details இல்லை!

இந்த பாட்டை trainல நான் கேக்குறப்போ எனக்கே தெரியாம ஆடிகிட்டு இருந்து இருக்கேன்...!!
பக்கத்துல நின்னுகிட்டு இருந்த ஒரு வெள்ளைக்கார தம்பி light ஆ jerk ஆகி தள்ளி நின்னான்..!
தம்பி இந்த பாட்டை டான்ஸ் ஆடாம கேக்கவே முடியாது..சோ இன்னும் ஒரு மூணு நிமிஷம் தள்ளியே நில்லுப்பானு மனசுக்குள்ள அவனுக்கு ஒரு மெச்செஜ் அனுப்பிட்டு ஆடி முடிச்சேன்!!