இன்னும் இருக்கிறது... உயிர்!

ஏவுகணையின் பசிக்கு உறவுகளை இழந்திட்ட
என் ஈழத்து உடன்பிறப்பே...,
உனக்கிங்கே சொந்தங்கள் ஓரிருவர் அல்ல,
நூறு கோடி உண்டு.
கிளம்பிடு!

"வாழ்வில் லட்சியம்" - சரி.
"வாழ்வதே லட்சியம்" - சரியல்ல.
புறப்படு!

ஒரு வேளை பாலுக்காக ஏங்கி தவித்து,
மழலைகள் மறைந்தது போதும்...

சிறத்தில் வழிந்தோடும் குருதியை
நீ
குப்பை கொண்டு அடைத்தது போதும்...

பிறந்த மண்ணில்,
பிச்சைகாரனாய் திரிந்ததும் போதும்...
திரும்பிடு!

உன்னை இங்கே
அகதியாய் பார்ப்பதில்லை,
வீடு திரும்பிய
சுற்றமாகத்தான் பார்க்கிறோம்.
சேர்ந்திடு!

உனக்காக உன்னை தவிர வேறெதையும்
இழக்க தயாராகத்தான் இருக்கிறோம்.
கலந்திடு!

இருப்பதை உன்னுடன் பகிர்ந்துகொள்வதில்
எங்களுக்கு வருத்தமில்லை...

ஏனெனில்....

இந்தியனின் இதயம்
இன்னும்
உயிருடன் தான் உள்ளது!